இஞ்சி இடுப்பழகா பாட்டுக்கு குடும்பத்துடன் டிக் டாக் செய்த டேவிட் வார்னர்….!

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் வர முடியாததால் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், திரைப்படங்கள் என வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா பாடலின் bgmக்கு டிக் டாக் செய்துள்ளார்.

டேவிட் வார்னரின் மனைவி மற்றும் குழந்தைகளும் அந்த வீடியோவில் உள்ளனர்.