பரபரப்பு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘கம்பெனி’.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு ‘டி- கம்பெனி’ என்ற பெயரில் சினிமாவை உருவாக்கியுள்ளார்.

இந்த படம் மும்பை நிழல் உலக தாதா இப்ராஹிம் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாகும், இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

‘டி- கம்பெனி’ படம் குறித்து அதிகமாகவே ‘பில்டப்’ கொடுத்து பேட்டி அளித்துள்ளார், ராம் கோபால் வர்மா.

அதன் சுருக்கம் :

“தெரு ரவுடியாக இருந்து, பில் கேட்ஸ் போன்று எதிர்காலம் குறித்து யோசித்து சர்வதேச நிழல் உலக தாதாவாக, தாவூத் இப்ராஹிம் எப்படி வளர்ந்தார் என்பதை விளக்கமாக இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறேன்.

இந்த படத்துக்காக நான் உழைத்தது, சாதாரண உழைப்பு அல்ல, தாதாக்கள், அவர்களை என்கவுண்டரில் வீழ்த்திய போலீசார், தாதாக்களுடன் தொடர்பில் உள்ள எங்கள் சினிமா உலக ஆட்கள் மற்றும் நிழல் உலகத்தின் இடைத்தரகர்கள் உள்ளிட்டோருடன் 20 ஆண்டுகாலம் உடன் இருந்து, ஆய்வு செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளேன்’’ என்கிறார், ராம் கோபால் வர்மா.

தமிழ், இந்தி, தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

– பா. பாரதி