மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரகிம் கூட்டாளி லண்டனில் கைது

ண்டன்

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரகிமின் கூட்டாளி ஜபீர் மோதி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ரகிம் மீது பல தீவிரவாதக்  குற்றச்சாட்டுக்கள் உள்ளன.     அதை ஒட்டி அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.   அவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது.   மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய புள்ளியான தாவூத் இப்ரகிமை இந்திய காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தாவுத் இப்ரகிமின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவர் ஜபீர் மோதி.  சுமார் 48 வயதான இவர் வெள்ளிக்கிழமை லண்டன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவரிடம் பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்துள்ளது.   அதன் மூலம் அவர் கராச்சி நகரில் வசிப்பது தெரிய வந்துள்ளது.   ஜபீர் மோதி மீது ரூ.40 கோடி மோசடி வழக்கு ஒன்று இந்தியாவில் நிலுவையில் உள்ளது.

லண்டனில் ஜபீர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.     இவரிடம் 10 வருடங்கள் இங்கிலாந்தில் வசிப்பதற்கான விசா உள்ளது.   மேலும் அவரிடம் அண்டிகுவா மற்றும் டொமினிகன் குடியரசின் குடியுரிமையும் உள்ளதாக கூறப்படுகிறது.    தாவூத் இப்ரகிமின் நிதி விவகாரங்களை இவர் கவனித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.