இன்று 3வது நாள்: சிஏஏ-க்கு எதிராக சென்னையில் தீவிர கையெழுத்து வேட்டை நடத்தும் ஸ்டாலின்…

சென்னை:

சிஏஏ-க்கு எதிராக தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை அறிவித்த திமுக, கடந்த 2ந்தேதி தொடங்கப்பட்டு கையெழுத்து  வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 3-வது நாளாக குடியுரிமை சட்டத்திருத்தத் திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

சென்னை தேனாம்பேட்டை   தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து பயணிகள், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மாநகர பேருந்தை நிறுத்தி, அதில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் திமுகவினர் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

 

கார்ட்டூன் கேலரி