டாஸ்மாக் மதுக்கடையை தடுக்க இரவு பகலாக காவல் காக்கும் மக்கள்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மோரனம் A காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

அதற்கான இடம் தேர்வு படம் நடைபெற்று வருகிறது.

குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யவந்த அதிகாரிகளை ஊருக்குள் வர விடாமல் வழியிலேயே தடுத்து நிறுத்தி, விரட்டியடித்தனர் அக்கிராம பொதுமக்கள்.

மேலும் இரவோடு இரவாக அங்கு கடை அமைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இரவு முழுக்க கண்விழித்து காவல் காத்துவருகின்றனர் அந்த பகுதி இளைஞர்கள்.

உச்சநீதி மன்ற தீர்ப்பையடுத்து, நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்றிவரும் அரசு, அதை அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் திறக்க முயன்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பொதுமக்கள் போராடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.