தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது கோவிஷீல்டு…! டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தீவிரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஜெனரல் (டி.சி.ஜி.ஐ –  Drugs Regulator General of India ) நோட்டீஸ் அனுப்பி  உள்ளது.

கொரோனா தொற்றை அழிப்பதற்காக, உலகின் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. பல கோட்டை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் நடத்தப்பட்ட சோதனையில், கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் கோவிஷீல்ட் தடுப்பூசி இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது கோவிஷீல்ட் (SII-ChAdOx1 nCoV-19) என அழைக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை மனிதர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. சுமார்   1,600 தன்னார்வலர்களுக்கு சீரம் நிறுவனம் இந்த தடுப்பூசியை பரிசோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ட்ரா ஜெனெகாவைத் தவிர, இந்தியாவில் தற்போது இரண்டு உள்நாட்டு தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன.

இந்த தடுப்பூசி சோதனைகளை நடத்தி வந்த இங்கிலாந்து, சோதனை நடத்தப்பட்ட தன்னார்வலர்களுக்கு கடுமையான பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதால், அதை உடடினயாக நிறுத்தி உள்ளது. ஆனால், இந்தியாவில்  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ),கோவிஷீல்ட் தடுப்பூசியின் தற்போதைய மருத்துவ சோதனைகள்  தொடரும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து,   கோவிஷீல்ட் தடுப்பூசியின் தற்போதைய மருத்துவ சோதனை ஏன் நிறுத்தப்படவில்லை என்பது குறித்து விளக்கம் கோரி இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆனால், கோவிஷீல்டு சோதனையில், இதுவரை எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை என்று சீரம் கூறி வருகிறது. அதேவேளையில்,   இங்கிலாந்தின் சோதனைகள் குறித்து எங்களால் அதிகம் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றும்  கூறி உள்ளது.