விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான விஜேவாக வலம் வரும் டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்துக்கொண்டதோடு சில மாதங்களிலேயே அவரை விவாகரத்து செய்தார் .

இந்த நிலையில், டிடி-யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த், டிடியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பின் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விடுவதாக வாக்கு குடுத்த டிடி திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து தனது வேலையில் கவனம் செலுத்தியதோடு, அதிகமான ஆண் நண்பர்களுடனும் பழகி வந்தாராம் .

இதன் காரணமாகவே டிடி-க்கும், ஸ்ரீகாந்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் பிரிவதற்கும் காரணமாக அமைந்துவிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.