‘பேட்ட’ ஸ்டைல் ப்ரமோவுடன் தொகுப்பாளினியாக களமிறங்கும் டிடி…!

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி

தொகுப்பாளராக மட்டுமின்றி, படங்களிலும் நடித்து வருகிறார் டிடி. தனுஷின் ‘பவர் பாண்டி’, ஜீ.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’ ஆகிய படங்கள் டிடி.யின் நடிப்பில் சமீபத்தில் வெளியானவை.

இந்நிலையில் தற்போது எங்கிட்ட மோதாதே’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன் நிகழ்ச்சியை, டிடி தொகுத்து வழங்குகிறார். முதல் சீஸனையும் அவர்தான் தொகுத்து வழங்கினார்.

இதன் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘பேட்ட’ படத்தில் ரஜினி பேசும் வசனங்களை, நிகழ்ச்சிக்கு ஏற்றதுபோல் மாற்றிப் பேசியுள்ளார் டிடி.

கார்ட்டூன் கேலரி