20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக, நடுவராக பணியாற்றி வருபவர் திவ்யதர்ஷினி.

விக்ரம், நயன்தாரா நடிப்பில் வெளியான இருமுகன் படத்தின் ஹெலனா பாடலுக்கு வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடி. அந்த வீடியோ பதிவிடப்பட்ட 22 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

https://www.instagram.com/p/CL_zEAADxAU/