தலஅஜித் பிறந்தநாளுக்கு டிடி வெளியிட்ட மேஷ்அப் வீடியோ…..!

நாளை அஜித்தின் பிறந்தநாள். தல ரசிகர்கள் அனைவரும் அதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

அஜித் பிறந்தநாள் காமன் டிபி’யை பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டனர் .கொரோனா ஊரடங்கில் இருப்பதால் அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால் ரசிகர்கள் விடுவதாய் இல்லை .

இந்நிலையில் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தல அஜித்தின் பிறந்தநாளுக்காக ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “தெறிக்க விடலாமா.. அட்வான்ஸ் பர்த்டே அஜித் சார்” என டிடி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார்.