வாழ்க்கையில் இரண்டு பேர் கிட்டயும் காதல் இருக்கனும் ; உருக்கமாக பேசிய டிடி…!

கடந்த 20 வருடங்களாக சின்னதிரையில் வலம் வரும் டிடி.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பரஸ்பர புரிதல் இல்லாததால் கணவனை டிடி சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்ததோடு விவாகரத்தும் பெற்றார்.

இந்நிலையில் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டிடி , ‘வாழ்க்கையில் இரண்டு பேர் கிட்டயும் காதல் இருக்கனும். சில சமயங்களில் அது உடைஞ்சி கூட போகும். அந்த சமயத்துல சிலர் நம்மை ஆதரிப்பாங்க, சிலர் நம்மை கீழே தள்ளிவிடுவாங்க. அதையெல்லாம் தாண்டி முன்னேறனும்.

விவாகரத்து ஆன நாள் என் மனதில், எப்படியாவது கோர்ட்டுக்கு போகணும் அப்படிங்குற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சி. அதன் பிறகு இப்போது வரை பேசவில்லை, சந்திக்க கூட இல்லை. ஆனாலும் என் வாழ்க்கை ஓடிக்கிட்டு தான் இருக்கு. கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.