ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்திய டெல்லி!

 

DD win by 7 wickets

 

ஐ.பி.எல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தியது.  முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 77 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி 17.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி வீரர் பேன்ட் 43 பந்துகளில் 97 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். மேலும் டெல்லி வீரர் சாம்சன் 31 பந்துகளில் 61 ரன்களை குவித்தார்.