செந்தில்பாலாஜி திமுகவில் இணைவது, தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொள்வது! டிடிவி ஆதரவு பழனியப்பன்

தர்மபுரி:

முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான, செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது என்பது,  தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொள்வது  டிடிவி ஆதரவாளன பழனியப்பன் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பழனியப்பன்,  தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் எந்தவித சலமும் இன்றி கட்சி பணியாற்றி வருகிறார்கள், யாரும் எங்கும் போக மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும் எல்லாரும் எங்களுடன் வந்து விடுவார்கள் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியே என்றவர், யாரும் எங்கும் போக மாட்டோம் என்றார்.

என்னைப்பற்றியும் தவறான தகவல்கள் வெளியானது… ஆனால் தற்போது பூத் கமிட்டி வேலை யாகத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்… இதுபோன்ற தகவல்கள் டிடிவியின் செல்வாக்கை குறைக்க திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

அதையடுத்து,  செய்தியாளர்கள் அவரிடம் செந்தில்பாலாஜி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு,  அம்மாவின் விசுவாசி செந்தில் பாலாஜி.. ஊடகங்களில்வருவதுபோல எதுவும் செய்ய மாட்டார் என்று கூறினார்.

செந்தில் பாலாஜி கட்சி மாறுவது குறித்து எதுவும் சொல்லவில்லை, அவர் தவறான முடிவை எடுக்க மாட்டார் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். கட்சி மாறுவது குறித்து வரும் செய்திகளுக்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்திருக்கலாம் என்றவர்,  திமுகவில் இணைவது என்பது தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொள்வது போன்றது  என்றவர் அப்படியொரு நிலை வராது என்றும் கூறினார்.

மேலும்,  தியாகத்லைவி சின்னமான வழியில் வந்தவர்கள் நாங்கள் என்றவர்… இங்கிருந்து யாரும் அங்கே போக மாட்டார்கள்…  மற்றவர்கள்  இங்கு வந்து சேரும் காலம் வரலாமே தவிரே இங்கி ருந்து யாரும் போக மாட்டார்கள் என்றும்,  அமுமுக தமிழ்நாட்டில ஆளக்கூடிய இயக்கமாக மாறும், என்றவர் விரைவில் அமமுகழகம்  வீறு கொண்டு எழுந்து வரும், கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

டிடிவியின் நற்பண்புகளால் அவருக்கு மக்களிடையே சிறப்பான வரவேற்பு உள்ளது… சிலர் வேண்டு மென்றே இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்… தமிழகத்தில் எப்போது சட்ட மன்ற தேர்தல் வந்தாலும் டிடிவிதான் முதல்வராக வருவார்  என்றும் தெரிவித்தார்.