இறந்த டிஎஸ்பி.க்கு இடமாற்ற உத்தரவு…ஆந்திராவில் காமெடி

அமராவதி:

ஆந்திரா மாநிலத்தில் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்தனர் ராமான்ஜநேயுலு. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் 16 டிஎஸ்பி.க்கள் மாநில முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த பட்டியலில் இறந்த ராமான்நேயுலுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அவர் திருமலை சிறப்பு பிரிவு டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்தார். அவர் உடனடியாக காவல்துறை தலைமை அலுவலகத்தில் ரிப்போட் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறந்த டிஎஸ்பி.க்கு இடமாற்ற உத்தரவு வெளியான தகவல் ஆந்திர காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த டிஜிபி நந்தூரி சாம்பசிவ ராவ் உத்தரவிட்டுள்ளார். காவல் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‘‘இது எழுத்து பிழையாக நடந்துவிட்டது. இது ரத்து செய்யப்பட்டுவிட்டது’’ என்றார்.

You may have missed