ஜூலை 26-ல் ரிலீசாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘டியர் காம்ரேட்’…!

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘டியர் காம்ரேட்’, ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரத் கம்மா இயக்கும் இப்படம் தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இதில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா நடித்துள்ளார்.

இந்தப் படம், வருகிற ஜூலை 26-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை மே 31-ம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். ஆனால், எல்லா மொழிகளிலும் சரியான தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதால், காத்திருந்து ஜூலை மாதம் ரிலீஸ் செய்கின்றனர்.

கார்ட்டூன் கேலரி