‘டியர் காம்ரேட்’ தமிழ் டிரைலர் வெளியீடு….!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் காம்ரேட்’ படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் தமிழ் வர்ஷன் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

நேற்று வெளியாகி இதுவரை 4 மில்லியன் பார்வைகளுக்கும் மேல் கடந்துள்ளது. இப்படம் ஜூலை 26-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

கார்ட்டூன் கேலரி