அன்புள்ள விவேக்…. நீ ஒரு முடிவில்லா புத்தகம்… இரங்கற்பா

அன்புள்ள விவேக்…. நீ ஒரு முடிவில்லா புத்தகம்… இரங்கற்பா

வெங்கடகிருஷ்ணன் ராஜகோபால் முகநூல் பதிவு

 

அன்புள்ள விவேக்…

மனம் வளர்த்தாய் மரங்கள் வளர்த்தாய்
சிரிப்பை வளர்த்தாய் சிந்தனை வளர்த்தாய்
கலை வளர்த்தாய் கருணை வளர்த்தாய்
நடிப்பை வளர்த்தாய் நட்பை வளர்த்தாய்

கன்றை இழந்தவன் காலனை தேடினாயோ
உன் நட்பை ஏங்கி கலாமும் காலனாய் மாறினாரோ

செல் காலத்தை வென்றவனே செல்
செல் கலாமை வென்றவனே செல்
செல் கண்ணீரை வென்றவனே செல்
செல் கருணையின் உருவமே செல்
செல் கம்பீரமாய் அவ்வுலகு செல்

நீ மகிழ்வித்த மனம் கரைகின்றன
நீ வளர்த்த மரம் கண்ணீர் விடுகின்றன
நீ ஒரு முடிவில்லா புத்தகம்….