சென்னை:

திமுகவினர் வைத்திருந்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்துள்ள நிலையில், அவரது பெற்றோருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் நேரில் ஆறுதல் கூறி வரும் நிலையில், அதிமுக அரசு சார்பாக ஆறுதல் சொல்ல கூட யாரும் வரவில்லையே என்று  சுபஸ்ரீயின் தாய் வேதனையுடன் தெரிவித்தார்.

சென்னை பள்ளிக்கரணையில் இருச்சகர வாகனத்தில் சென்ற சுபடீஸ்ரீ மீது அதிமுகவினர் சாலையில் நடுவில்  வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து  விதிமீறல் பேனர்களை அகற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. மேலும், பேனர் குறித்த புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அரசியல் கட்சிகள் மற்றும் திரையுலகினர் பேனர்களை தவிர்க்க தங்களது ஆதரவாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். சுபஸ்ரீயின் தாயாரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுபஸ்ரீயின் தாயார், தங்களது ஒரே ஒரு குழந்தையை யும் பேனர் கலாச்சாரத்தால் இழந்துள்ளோம், எங்களைப்போன்ற நிலை யாருக்கும் வரக்கூடாது, பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

தங்களது மகள் சாவுக்காக அதிமுக தரப்பிலோ, அரசு தரப்பிலோ  ஆறுதல் சொல்ல கூட யாரும் வரவில்லை, என சுபஸ்ரீயின் தாயார் கீதா வேதனை தெரிவித்துள்ளார். சுபஸ்ரீயின் மரணம் காரணமாக அவரது பெற்றோர் நிலைகுலைந்து தவித்து வருகின்றனர்….