இலங்கை தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவு.. சோனியா இரங்கல்…

டெல்லி:

இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்  கடந்த மே மாதம் 27ந்தேதி காலமானார். அவரது மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். 

 

இலங்கையை சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் முக்கியமானவர் ஆறுமுகன் தொண்டமான்.  அவரது முழுப்பெயர் சவும்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான்.  இவர் 30 வருடங்களாக இலங்கை மலையக அரசியல் தொழிற்சங்க தலைவராக இருந்து வந்தனர். இவரது குடும்பமே அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக உழைத்து வருகிறது.
தற்போதைய அரசிலும் அமைச்சராக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில்  வீட்டிலில் கீழே விழுந்த நிலையில், கொழும்பில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.
ஆறுமுகன் தொண்டமான்  மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட உலக நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவரான சோனியா காந்தியும், தொண்டமான் மறைவு குறித்து அவரது மகன் ஜீவன் தொண்டமானுக்கு இரங்கல் செய்தி அனுப்பி யிருந்தார். அதில் கூறியிருப்பதாவது,
உங்கள் தந்தை ஆறுமுக தொண்டமான் மறைந்த செய்தி அறிந்து துயரமும், கவலையும் அடைந்தேன். எனது இதயப்பூர்வ இரங்கலை ஏற்க வேண்டுகிறேன்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவராக அறியப்பட்ட ஆறுமுக தொண்டமான்,தேயிலை தோட்ட தொழிலாளர்கன் உரிமைகளுக்காகவும், தமிழ் மக்களின் நலனுக்காகவும் தீர்க்கமாக பணியாற்றியவர். தாத்தாவான, புகழ்பெற்ற சவுமிய மூர்த்தி தொண்டமானைப் போல, ஆறுமுக தொண்டமானும், தொடர்ந்து புகழ்பெற்றவராக இருந்தார். சவுமிய மூர்த்த தொண்டமான் சவாலான காலத்தில் சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார்.
போருக்குப் பிந்தைய மறு சீரமைப்பு பணிகளில் ஆறுமுக தொண்டமான் ஆற்றிய பெரும் பங்கும், தோட்டத் தொழில் துறையின் மேம்பாட்டுக்கு அவர் ஆற்றிய பணியும் எப்போதும் நினைவு கூறத்தக்கதும், போற்றுதலுக்கும் உரியதாகும்.
அவரது இறப்பின் மூலம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான  வலுவான ராஜ்ய உறவுகளை ஏற்படுத்த பாடுபட்ட நண்பரை நாங்கள் இழந்து விட்டோம்,
அவரது நினைவு வருங்கால சந்திதியினருக்கு ஊக்கமளிக்கும்.
தங்கள் துயரத்தில் பங்கேற்கும்  நாங்களும் பங்கற்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.