ப்யூபுரூஃபன் உலக சுகாதார நிறுவனத்தின் “அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்” உள்ள ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது. இம்மாத்திரையை உருவாக்கிய ஸ்டிவர்ட் ஆடம்ஸ் –  ஐப்யூபுரூஃபன் மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர், நாட்டிங்காம் இன் மிகச்சிறந்த வேதியியலாளர் மற்றும் மருந்தியல் விஞ்ஞானி .

1960 ல் ஐப்யூபுரூஃபன் உருவாக்கிய அவர் ஜனவரில் 30ல் தனது 95 வது வயதில் காலாமானார், இதில் முக்கியமான விசயம் என்ன வெனில் இந்த கண்டுபிடிப்பிற்காக தனியாக ஏதும் பணம் பெறாதவர்.1960 லியே ஐப்யூபுரூஃபன் உருவாக்கப்பட்டிருந்தாலும் இன்று வரை உலக சுகாதார நிறுவனத்தின் “அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில்” இருப்பதிலிருந்தே அதன் சிறப்பை உணரலாம்

திரு.ஆடம்ஸ், நாட்டிங்காமில் உள்ள பூட்ஸ் ஆய்வகத்தில் பணிபுரியும்போது சக மருந்தியல் விஞ்ஞானி ஜான் நிக்கல்சன் உடன் இணைந்து  ஐப்யூபுரூஃபன்  உருவாக்கினர்
1961 இல் ஐப்யூபுரூஃபனுக்கு காப்புரிமை பெறப்பட்டு 1969 இல் இங்கிலாந்திலும், 1974 இல் அமெரிக்காவிலும் முடக்கு வாதத்துக்கானவும், வலி நீக்கும் மருந்தாகவும் இது பயன்பட்டது

ஐப்யூபுரூஃபன் பயன்படுத்திய சுவராசிய சம்பவம்

1971 ஐரோப்ப்பிய கருத்தரங்கில் என்னுடைய நண்பர்களுடன் நான் மகிழ்ச்சியாக கொண்டி டாடிக்கொண்டு இருந்தபோது அடுத்த நாள் காலை முதல் ஆளாக பேசவேண்டியதிருந்தது. ஆனால் வோட்காவினை அதிகமாக குடித்ததால் ஏற்பட்ட தலைவலிக்காக 600 மி.கிராம் ஐப்யூபுரூஃபன் உட்கொண்டேன். உண்மையில்  அதை சோதனைதான் செய்தேன். ஆனால் ஒரு அதிசயமாக அந்த தலைவலி குணமானது, அதிலிருந்து விளையாட்டாக நிறைய பேர் குடியால் ஏற்பட்ட தலைவலிக்கு பயனளிக்கிறதா என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் அதை நான் ஏற்றுக்கொள்ளவேண்டியதிருக்கிறது என்றும் ஸ்டிவர்ட் ஆடம்ஸ் டெலிகிராப் பத்திரிக்கையில் தெரிவிக்கிகிறார்.

1987ல்  பிரிட்டிஷ் பேரரசால் வழங்கப்படும் Order of the British Empire விருதினை பெற்றார். Order of the British Empire விருதாது 1917ல் இருந்து ஜார்ஜ் வி அரசரால் துவங்கப்பட்டு வழங்கப்படும் இவ்விருது கலை மற்றும் அறிவியல் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படுகிறது.  அது மட்டுமல்லால் நாட்டிங்ஹாம் ன் சுதந்திர மனிதன் என்ற சிறப்புத் தகுதியையும் பெறும் ஆடம்ஸ் தன்னுடைய ஓய்வுக்காலத்திற்குப் பின்னர் Royal Pharmaceutical Society ன் விருதினையும் பெறுகிறார்.

1969ல் இருந்து இன்றுவரை  வலி நீக்கும் நிவாரணியாக  ஐப்யூபுரூஃபன் ஐ உருவாக்கிய  ஸ்டிவர்ட் ஆடம்ஸ் ஜனவரி 30ம் தேதி மரணமடைந்தார்

ஐப்யூபுரூஃபன் மருந்தை உருவாக்கிய  ஸ்டிவர்ட் ஆடம்ஸ் ஐ  மருத்துவத்துறைஎன்றென்றும் அவரை நினைவில் வைத்திருக்கும்….

செல்வமுரளி