சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: மேலும் 5 போலீசார் கைது…

தூத்துக்குடி:

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற  தந்தை மகன், காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக  உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 காவல்துறை யினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட் டுள்ளனர்.

ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக, சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறையில் அடுத்தடுத்து  உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்து, அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உள்ள தாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு சம்மதம் அளித்த நீதிமன்றம்,அ துவரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உடனே வழக்கை கையிலெடுக்க உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சிபிசிஐடி பிரிவினர் 12 குழுக்களாக பிரிந்து அதிரடி விசாரணையை மேற்கொண் டது. இதில் கிடைத்த ஆதாரப்பூர்வமான தக்கள்  மற்றும் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கொலை வழக்காக மாற்றம் செய்து, தந்தை மகனை சித்ரவதை செய்து கொலை செய்ததாக, காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையை அடுத்து, தந்தை , மகன் உயிரிழந்த விவகாரத்தில் அப்போது  பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியது.  அதையடுத்து, அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி