டில்லி:

12வயது குறைவான குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியன் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக ஒரு சில மாநிங்களில், குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் கடுமையான பிரிவுகளில் சட்ட திருத்தம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனையை உறுதி செய்ய போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திண  உ.பி. மாநில இளம்பெண் வன்கொடுமை மற்றும், காஷ்மீர் கத்துவா என்ற கிராமத்தை  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட  பொது நல வழக்கில் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது.

அதைத்தொடர்ந்து வழக்குஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.