கள்ளச் சாராயம் விற்றால் மரண தண்டனை: உ.பி.யில் புதிய சட்டம் அமல்

லக்னோ,

ள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை உ.பி.மாநில பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு மாநில கவர்னரும் அனுமதி அளித்து உள்ளார்.

உ.பி.யில் பாரதியஜனதாவை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு  அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மாநிலத்தில் கள்ளச்சாராயம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதத்தில், கள்ளச்சாராயம் விற்பனை செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதுகுறித்து மாநில சட்டசபையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பபட்டு நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த சட்டத்திருத்தத்தில், சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதம், ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்து  நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவை பரிசீலித்த கவர்னர் ராம்நாயக்  மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

கார்ட்டூன் கேலரி