Random image

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை…ராணுவ நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகம் இருக்கும். அவ்வப்போது நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்னர்.
பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள், ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள் என 202 பேர் கொல்லப்பட்டது வழக்குகளில் பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கை ராணுவ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாதிகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் 7 பயங்கரவாதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இத்தகலை அந்நாட்டு ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா தெரிவித்துள்ளார்.