Random image

ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை

ஐதராபாத்:

ஐதராபாத்தில் 2007ம் ஆண்டு நடந்த இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 2 தீவரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-.8-.2007ம் தேதி கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் மொத்தம் 44 பேர் பலியாகினர். 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று. .

இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் சவுத்ரி ஆகியோரை குற்றவாளிகள் என ஐதராபாத் பெருநகர 2வது அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.ஸ்ரீனிவாஸ் கடந்த 4ம் தேதி அறிவித்தார்

இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. இருவருக்கும் மரண தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தாரிக் அஞ்சும் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டது.