அதிமுக அரசுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்

சென்னை

18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் அமர்வில் இருந்த நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என தினகரன் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.   அதை ஒட்டி தமிழக சபாநாயகர் இந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.   இந்த வழக்கின் மேல் முறையீடு சென்னை உயர்நீதிமன்றாத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரிக்கபட்டது.

வழக்கில் இரு நீதிபதிகளும் இரண்டு விதமான தீர்ப்பை வழங்கினார்கள்.   இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என தீர்ப்பளித்தார்.   ஆனால் நீதிபதி சுந்தர்  தவறு என அதிமுக அரசுகு எதிராக தீர்ப்பளித்தார்.  இந்த வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டார்.  பிறகு அவர் நீக்கப்பட்டு சத்யநாராயணா மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.   அதிமுக அரசுக்கு எதிராக அவர் தீர்ப்பளித்ததால் அவரை கொல்லப்போவதாக அடையாளம் தெரியாத சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.   நீதிபதி சுந்தர் இது குறித்து புகார் அளித்துள்ளார்.   இந்த மிரட்டலால் நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என சொல்லப்ப்படுகிறது.