ஜெகனை எதிர்த்தார் எம்பி. வந்தது உடனே எமலோக மிரட்டல்..

--

ஜெகனை எதிர்த்தார் எம்பி. வந்தது உடனே எமலோக மிரட்டல்..

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது.

 இந்த கட்சியைச் சேர்ந்த ரகுராம கிருஷ்ண ராஜு, நரசாபுரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

அண்மைக்காலமாக அவர் ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்து வருகிறார்.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவையே தூக்கி எறிந்து பேசும், ஜெகன்மோகன், சும்மா விடுவாரா?

ஒய்.எஸ்.ஆர். கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் , ரகுராமுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 உள்ளூர் போலீசில் அவர் புகார் செய்தார். எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு , தனக்கு வந்துள்ள கொலை மிரட்டல் குறித்து எம்.பி. ரகுராம கிருஷ்ணராஜூ புகார் அனுப்பியுள்ளார்.

‘’ எனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்’’ என்று சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குறித்து ஆளுங்கட்சி எம்.பி.யே  புகார் தெரிவித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– பா.பாரதி