கொலை மிரட்டல் : கோவா எழுத்தாளருக்கு தீவிர போலீஸ் பாதுகாப்பு

னாஜி

கோவாவை சேர்ந்த எழுத்தாளர் தாமோதர் மௌசோவுக்கு வந்த கொலை மிரட்டலை ஒட்டி அவருக்கு தீவிர காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோவாவை சேர்ந்த புகழ்பெற்ற கொங்கணி மொழி எழுத்தாளர் தாமோதர் மௌசோ.   இவர் பல நாவல்கள், சிறுகைதைகள் எழுதி புகழ்பெற்றவர் ஆவார்.    கடந்த 1983ஆம் வருடம் இவர் எழுதிய கர்மெலின் என்னும் நாவலுக்கு இவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.   இவருடைய புரட்சிகரமான எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்ட வாசகர்ளும் இவர் மீது கோபம் கொண்டுள்ளவர்களும் உள்ளனர்.

சமீபத்தில் இவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக அரசுக்கு தகவல் வந்தது.    ஏற்கனவே கர்நாடக மாநில எழுத்தாளரான கௌரி லங்கேஷ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதால் கோவா அரசு பரபரப்பாகியது.   தாமோதருக்கு தீவிர காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.   இது குறித்து கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கோவா சட்டமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

அவர், “உள்துறை அமைச்சகத்திடமிருந்து கௌரி லங்கேஷை தொடர்ந்து மேலும் சில எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வந்தது.   அதில் தாமோதர் மௌசோவும் ஒருவர்.   எனவே கோவா அரசு அவருக்கு தீவிர காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது.   எனக்கு தனிப்பட்ட முறையில் தாமோதருடன் நல்ல பழக்கம் உண்டு” என கூறி உள்ளார்.