குவாட்டமாலாவில் எரிமலை வெடித்து சிதறியது: 25 பேர் பலி

குவாட்டமாலா: 

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  300க்குழும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4.30 மணி அளவில் இந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வெடித்து சிதறியது.

அதன் காரணமாக வெளிப்பட்ட எரிமலைக்குழம்பான லாவா, அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்தது. இந்த விபத்தில், அந்த கிராமத்த சேர்ந்த வீடுகளும் எரிந்து பொசுங்கின. ஏராளமான மக்களும் தீயில் சிக்கி கருகினர்.

இந்த கோர தீப்பிழம்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. மீட்புபணிகளி தேசிய பேரிடர் மேலாண்மை  குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல் காணமாக, குவாட்டமாலா  விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இந்த  பேகோ எரிமையில் சீற்றம் காரணமாக  தேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1974ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்றுள்ள  மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி