கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 2,236ஆக உயர்வு

பீஜிங்:

சீனாவை பயமுறுத்தி வரும்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2ஆயிரத்து 236ஆக உயர்ந்து உள்ளது.  அதுபோல கொரோனா வைரஸ் தொற்றால்  75ஆயிரத்து 400 பேர் தாக்கப்பட்டு  சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அந்நாட்டு சுகாதார நிறுவனம்தெரிவித்து உள்ளது.

சீனாவின் வுகான் பகுதியில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று, வுகானா மாநிலத்தை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. மேலும் அருகே உள்ள பல மாநிலங்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.  இந்த  வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்   சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வியாழக்கிழமை நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,400 ஆக உள்ளது.

அத்துடன் மேலும் 31 மாநிலங்களில் இருந்து 75 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 1,614 பேருக்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.