பாக்தாத்:

ரான் மற்றும் ஈராக் இடையே ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த  சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. ஏராளமான கட்டிடங்களும் உடைந்து நொறுங்கின. இதன் பீதியடைந்த  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினர்.

அதையடுத்து,  நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்கு இடையில் சிக்கித்தவித்த பலரை உயிருடன் மீட்டனர்.

சில இடங்களில் மீட்புப் பணிகள் இன்றும் நடைபெற்றுவரும் நிலையில் நிலநடுக்கத்தின் விளைவாக இரு நாடுகளிலும் 200க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாகவும், ஈரான் நாட்டு மலையோரப் பகுதிகளில் மட்டும் சுமார் 1700 பேர் காயம் அடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.