குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தேனி:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, மரணமடைந்த வர்களின்  எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

தீவிபத்தில் படுகாயம் அடைந்த சிவசங்கரி என்ற இளம்பெண்  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரைஅரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப் பேட்டையை சேர்ந்த சிவசங்கரி என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனால் குரங்கணி தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.