இஸ்தான்புல் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

இஸ்தான்புலில் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

istanbul

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள கர்தால் என்ற மாவட்டத்தில் நேற்று முன் தினம் ஏழு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டன. அதன்பிறகு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும் 11 சடலங்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.

building

இதனை தொடர்ந்து தற்போது இந்த விபத்தில் உயிரிழந்தன்வர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், “ கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன “ என தெரிவித்தனர்.

இதற்கிடையே கட்டிட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.