சென்னை லயோலாவில் பாரதமாதா, இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கண்காட்சி! பாஜக கடும் கண்டனம்

சென்னை:

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற  ஓவியக் கண்காட்சியில், பாரத மாதாவையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற கண்காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

லயோலா கல்லூரியில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய ஓவியங்கள்

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் பாரத மாதாவுக்கு மீடு என்ற பெயரில் ஓவியங்களும், இந்து கடவுள்களின் ஆயுதங்களான சூலத்தை கேவலப்படுத்தும் வகையிலும், இந்து பெண்களை அசிக்கப்படுத்தும் நோக்கிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஓவியக்கண்காட்சி குறித்து அறிந்த இந்து மதத்தை சார்ந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், லயோலாவை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து உள்ளது.

இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்ட ஹெச்.ராஜா, சென்னை லயோலா கல்லூரியில் கண்காட்சி என்ற போர்வையில் மோடியையும், இந்துமதத்தின் அடையாளங்களை யும் இழிவு படுத்திய ஈனச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,  லயோலா கிறித்துவக் கல்லூரியில் கல்லூரியில் வி.சி.க,கம்யூனிஸ்ட், நக்ஸல் கிறித்தவ மதமாற்றம் செய்யும் தீயசக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து திட்டமிட்ட விதத்தில் இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையில் நேரில் புகார் அளிக்கப்பட்டது உள்ளது என்றும் பதிவிட்டு உள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சியில், பாரத மாதாவை தவறாக சித்தரித்து வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது குறித்து, மதச்சார்பின்மை பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் நடுநிலையாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும், என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

, இது குறித்து லயோலா கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க தவறினால், பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.