நொய்டா

நிதி ஆயோக் தலைவர் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் ஏடிஎம்மின் எண்ணிக்கை கணிசமாக குறைப்படும் என கூறி உள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு நிதி ஆயோக் ஆகும்.    இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் ஆவார். அவர் நேற்று நொய்டாவில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் உரையில், “இன்னும் நாங்கு ஆண்டுகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும், ஏடிஎம் இயந்திரஙக்ளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும்.   ஏனெனில் அப்போது மொபைல் ஃபோன்களின் மூலம் பணவர்த்தனை அதிகரிப்பதால் இவைகளின் தேவை வெகுவாக குறைந்து விடும்.    ஏடிஎம்கள் தற்போதே பல இடங்களில் உபயோகிப்போர் இல்லாமல் இயங்கி வருகிறது.

சர்வதேச அளவில் மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் நாடாக இந்தியா உள்ளது.    உலகிலேயே இந்தியாவில் தான் 100 கோடி பயோமெட்ரிக் அதிக அளவிலான மொபைல்கள் மற்றும் அனேகமாக அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உள்ளன.    இப்போதே மொபைல் மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.   இது மென்மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உலகம் எங்குமே தற்போது பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது.  இந்தியா ஆண்டுக்கு 7.5% பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது.    இந்த மந்தமான உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்த வளர்ச்சியை அடைவதே இந்தியாவுக்கு மாபெரும் சவாலாக உள்ளது.   பொருளாதார முன்னேற்றத்துக்கு புதுமைகளைப் புகுத்துவது அவசியமாகும்.   எனவே அரசு பணமில்லா பரிவர்த்தனையை பெரிதும் ஊக்குவித்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.