காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே சில ஆயிரம் கடனுக்காக கொத்தடிமையாக நடத்தப்பட்ட 60வயது முதியவர் உள்பட 42 பேரை துணைஆட்சியர் தலைமையிலான  அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பத்தில் பகுதியில் நடராஜ் என்பவரிடம் சுமார் 5 ஆண்டு களாக 28 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து,  காஞ்சிபுரம் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு திடீரென சோதனை மேற்கொண்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையை காஞ்சிபுரம் மற்றும் வேலூர் சரகத்தை சேர்ந்த உதவி ஆட்சியர்கள் சரவணன் (காஞ்சிபுரம்),  எலம்பாகவத் (ராணிபேட்) தலைமையில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இரு பிரவுகளை சென்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு கொந்தடிமைகளை சிக்கி வாழ்ந்து வந்த 60வயது முதியவர் உள்பட பலர், அதிகாரிகளின் காலில் விழுந்து தங்களை மீட்குமாறு கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.‘ மேலும், தங்களுக்கு  சரிவர உணவு வழங்கப்படுவதில்லை, என்றும், குழந்தைகளுக்கு வெறும் தண்ணீரை மட்டுமே உணவாக கொடுக்கும் அவலம் நிலவுவதாகவும் கூறியவர், தாங்கள் காடுகளில் குடிசை அமைத்து,  பாம்புகள் பூச்சிகள் உள்ள பகுதியில், பயத்துடனே வாழ்ந்து வருகிறோம், என்றும், தங்களது  குழந்தைகள் பள்ளி செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தாங்கள் வாங்கிய  சில ஆயிரம் ரூபாய் கடன்களை,  பல ஆயிரம் ரூபாய் என கணக்கெழுதப்படுவதாகவும், பகல் முழுவதும் ஓய்வின்றி மரம் வெட்ட  பணிப்பதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர்

.தொழிலாளர்களின் நிலையை அறிந்துகொண்ட இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து,  காஞ்சிபுரத்தில் அடிமையாக வாழ்ந்து வந்த இருந்த 28 பேரும், வேலூரில் இருந்து 14 பேரும் உள்பட மொத்தம் 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 16 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.