டிசம்பர்-26: சுனாமி ஆழிப்பேரலையின் 15வது நினைவு தினம் இன்று

டிசம்பர்-26 இன்றைய தினம் உலக வரலாற்றில் மறக்க முடியாத தினம். கடந்த 2005ம் ஆண்டு இந்தோனேசியா கமடலில்  ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக வங்காள விரிகுடாட கடலில் எழுந்த  சுனாமி ஆழிப்பேரலைக்கு லட்சக்கணக்கானோர் பலியாகினர்…. இந்த கோர நிகழ்வின் 15வது நினைவு தினம் இன்று.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பா் 26ம் தேதி அதிகாலை சுமாா் 1 மணியளவில் இந்தோனேசியாவில், சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே நிலத்தட்டுகள் சாிந்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இது ரிக்டா் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை நிலநடுக்கம் பதிவானது.

சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்த இந்த நில நடுக்கம், ஆழிப்பேரலையாக உருவாகி கடற்கரையை நோக்கி ஆக்ரோஷமாக எழத் தொடங்கியது.  இந்த பேரலைகள்  லட்சக்கணக்கானோரை காவு வாங்கியது.

சுனாமியின் தாக்கம் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. சுமார் 2.30 லட்சம் போ் உயிாிழக்க நேரிட்டது.

இந்தியாவில் 9571, இந்தோனேஷியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் சுனாமிக்கு பலியாயினர்.

தமிழகத்தை பொறுத்தளவில், நாகபட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5819 பேரும், சென்னையில் 206, கடலுாரில் 603, காஞ்சிபுரத்தில் 124 பேரும் பலியாயினர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்று சுனாமி பேரலை தாக்கிய 15வது வருட நினைவு தினமாகும். இதையொட்டி, அரசியல் கட்சிகள், மீனவக் கிராமங்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் சுனாமி  நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

சுனாமி நினைவலைகள்…..

This slideshow requires JavaScript.