டிசம்பர் 6, 1992 ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில், 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா கும்பலால் இடித்துத் தள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில், 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

ஆண்டுதோறும் பாபர் மசூதி தகர்க்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதியைஇஸ்லாமிய அமைப்புகள் துக்க தினமாகவும், கருப்பு நாளாகவும் அனுசரித்து வருகின்றனர். நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாபர் மசூதி வரலாறு:

இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இந்துத்துவா அமைப்பை சேர்ந்த கரசேவகர்கள் இடித்து தள்ளினர். அந்த இடம் ராமர் கோவில் இருந்த ராமஜென்ம பூமி என்று அவர்கள் கூறினார்கள்.

அயோத்தி நகரம் கடவுள்  ராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் இதிகாசங்களில் கூறப்படுகிறது.

1528இல் முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னாள் அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு, மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.  அதற்கான வரலாற்று ஆய்வுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ராமஜென்ம பூமி விவகாரம் இரு மதத்தினராலும் பிரச்சினையாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 1989 தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி அயோத்தி பிரச்சனையை தேர்தல் களத்தில் பரப்புரைக்காகப் பயன்படுத்தியது. அதன் காரணமாக அப்போதைய பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, ராமர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக்க ரத யாத்திரை மேற்கொண்டார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, 1992 டிசம்பர் முதல் வாரத்தில் நாடு முழுவதும் இரு  கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். அவர்களால் டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு உலக இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  மசூதியின் இடிப்பு நாடு முழுவதும் இஸ்லாமியர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பல மாதங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது.

இக்கலவரம் மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி போன்ற இன்னும் பல நகரங்களுக்கும் பரவி கிட்டத்தட்ட 2000 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்தது

டிசம்பர் 1992லும், ஜனவரி 1993லும் ஏற்பட்ட கலவரங்களின்போதும் சுமார் 900 பேர் வரை உயிரிழந்தனர். பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மும்பையில்,  1993ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு நடை பெற்றது. இந்தியன் முஜாகுதீன் போன்ற இயக்கங்கள் தங்கள் தீவிரவாதத் தாக்கு தல்களுக்கான காரணமாக பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிட்டன

டிசம்பர் 16, 1992 அன்று நடுவண் அமைச்ச ரவை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம். எஸ். லிபெரான் தலைமையிலான லிபரான் குழுவை மசூதி இடிப்பைக் குறித்து விசாரணை செய்ய அமைத்தது. 16 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்தம் 399 அமர்வுகளுக்குப் பின்பு இக்குழு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 1,029 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சூன் 30, 2009 அன்று அளித்தது

.[16] அவ்வறிக்கையின்படி, டிசம்பர் 6, 1992 அன்று நடைபெற்ற அயோத்தி நிகழ்வுகள் “தன்னிச்சையானவையோ திட்டமிடப்படாதவையோ” அல்ல. அதில் வாஜ்பாய், அத்வானி, சுதர்ஸன், கல்யாண்சிங்,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 68 பேர் மற்றும் இந்துத்துவா அமைப்புகளையும் குற்றவாளிகளாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றனர்.

இவ்வழக்கை விசாரித்து வந்த ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியக் குற்றவாளிகளை விடுவித்து உத்தரவிட்டது. இதனை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

ஆனால் குற்றவாளிகளின் விடுதலைக்கு சட்டரீதியான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளித்ததை உச்சநீதிமன்றம் 2017 ஏப்ரல் 19ல் நிராகரித்தது .தினந்தோறும் விசாரணை நடத்தி 2 வருடத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிரப்பித்துள்ளது.

இது குறித்த வழக்கு அடுத்த ஆண்டு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.