டிசம்பர் 6: இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்! பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

டில்லி:

ன்று டிசம்பர் 6ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். அதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 26-வது ஆண்டு தினம் இன்று நாடு முழுவதும்  கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி  தலைநகர் டில்லி செங்கோட்டை மற்றும் விமான நிலையங்கள்,  ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள், மும்பை, சென்னை, கல்கத்தா, பெங்களூரு உள்பட உ.பி. மாநிலத்திலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மக்கள் கூடும் இடங்களிலும்  பலத்த சோதனை நடைபெற்று வருகிறது. முக்கியமான இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் ராமர்கோவில் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்கள்,  சென்ட்ரல், எக்மோர் உள்பட ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பல இடங்களில் பயணிகள் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.  மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி களுடன் வெண்டிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் போலீஸ் ஆணையாளர்  ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள் சாலை யில் நீண்டநேரமாக அனாதையாக கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்றும், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியிருந்தால், அதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.