பண பற்றாகுறை: 500 ரூபாய் நோட்டுக்களை கூடுதலாக அச்சடிக்க முடிவு

டில்லி:

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பீகார், தெலங்கானா, டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள ஏடிஎம்.களில் பண பற்றாகுறை ஏற்பட்டுளளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘‘பண தட்டுப்பாடு செயற்கையாக உருவாகியுள்ளது. சில நாட்களில் இது சரி செய்யப்படும். தேவையை விட அதிகளவு பணம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

பண பற்றாகுறையை போக்க 500 ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு 500 ரூபாய் நோட்டுக்கள் 5 மடங்காக ரூ.2,500 கோடிக்கு அச்சிடப்படும்’’ என பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ்.சி. கார்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.