மனிதர்களுக்கு மரண பயத்தை காட்டும் முதலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு

அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முதலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவுப்பகுதிகளில் வசிக்கும் முதலைகளால் அதிகளவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுள்ளனர். இதனால் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி மறுத்தாலும், உள்ளூர் பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் ஆதாரமாக உள்ளன.

Crocodile

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் உள்ள உப்பு நீரில் வசிக்கும் முதலைகளின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. உப்பு நீர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் இவை மக்களுக்கு ஆபத்தை விளைவிப்பவையாக மாறி வருகின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் உப்பு நீரில் வசிக்கும் முதலைகளை வேறு இடங்களுக்கு தற்காலிகமாக மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சமர்பிக்க இந்த அறிக்கையில் உப்பு நீரில் வசிக்கும் முதலைகள் ஆபத்தை விளைவிப்பவையாக மாறி வருவதாக கூறப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆபத்தன விலங்குகள் மற்றும் தாவரங்களை அழிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்களுக்கோ அல்லது உள்ளூர் வாசிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த கூடிய வகையில் நடந்து கொள்ளும் விலங்குகளை தனிமை படுத்த சட்டம் அறிவுறுத்தியுள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வசிக்கும் குட்டி முதலைகளை அடுத்த 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அந்தமான் மற்றும் நிகோபர் காடுகளின் தலைமை காப்பாளரன தருண் கோமர் தெரிவித்துள்ளார். உப்பு நீரில் வசிக்கும் முதலைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அவைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளன.

உப்பு நீரில் வசிக்கும் முதலைகள் 7மீ வர வளரக்கூடியது. இவைகள் தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் சுந்தர்பன் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. அதிவேகமாக நீந்தும் இந்த முதலைகள் 2005ம் ஆண்டுவரை 23 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. மிகவும் பிரபலமான ஒண்டர் பீச் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் அதிகளவில் முதலைகளின் தாக்குதகள் நடந்துள்ளன. ஹேவ்லாக் தீவுகளில் 24வயதான அமெரிக்காவை சேர்ந்த பெண் முதலைகளால் தாக்கப்பட்டு இறந்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதலைகளினால் தாக்குதல் நடைபெறும் இடங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. நீரினால் சூழப்பட்டுள்ள தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மரண பயத்தை காட்டும் முதலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது இயலாத காரியம் என்று சில உள்ளூர் வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களை குறைப்பதற்கு முதலைகளை வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது தான் இறுதி கட்ட முடிவாக உள்ளது. தோல் மற்றும் இறைச்சிக்காக முதலைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக 1975ம் ஆண்டு முதலைகள் பாதுகாப்பு சட்டம் இயறப்பட்டது. இதன் காரணமாக அவைகளின் எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளதுடன், மனிதர்களின் உயிருக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது.