காவிரி விவகாரத்தில் மாநிலங்களோடு கலந்து பேசியே முடிவு: நிர்மலா சீத்தாராமன்

மதுரை:

காவிரி விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் கலந்துபேசிய முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.

இன்று மதுரை வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார். இது விவகாரத்தில் இதில் தொடர்புடைய மற்ற மாநிலங்களோடு கலந்து பேசியே முடிவு எடுக்க முடியும் என்றார்.

மேலும்,  நாடு முழுவதும் எஸ்.சி, எஸ்.டி மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வரும்  பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேர்கிறதா என கிராமங்களில் தங்கி ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Deciding to interact with other states for cauvery issue, says Nirmla seetharaman, காவிரி விவகாரத்தில் மாநிலங்களோடு கலந்து பேசியே முடிவு: நிர்மலா சீத்தாராமன்
-=-