டில்லி

பிரதமர் மீதான தேர்தல் விதிமுறைகள் புகார்கள் குறித்து தேர்தல் குழு ஆணையர்கள் வேறு வேறு முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பிரதமர் மோடி வார்தா மற்றும் லாதூர் ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில் பாலகோட் விமான தாக்குதல் குறித்து பேசி உள்ளார்.    ராணுவ நடவடிக்கைகளை பிரசாரத்தின் போது பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.    இதை ஒட்டி பிரதமர் மோடி மீது காங்கிரஸ் புகார் அளித்தது.

இந்த புகாரை தேர்தல் குழு ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லாவசா, சுஷில் சந்திரா ஆகியோர் விசாரித்தனர்.   விசாரணையில் பிரதமர் ராணுவ நடவடிக்கைகள் குறித்து பேசியது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டது.    இந்நிலையில் இந்த முடிவு ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையில் இருவர் பிரதமருக்கு ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.   பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.    அதாவது 2  : 1 என பிரதமருக்கு ஆதரவு கிடைத்ததால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் தேர்தல் விதிகளின் 10 ஆம் பிரிவின்படி அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட வேண்டும் என உள்ளது.   அத்துடன் மிகவும் இன்றியமையாத நேரத்தில் பெரும்பான்மை முடிவை ஏற்றுக் கொள்ளலாம் எனவும் விதிகள் தெரிவிக்கின்றன