இன்று ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுக்க இயலாது : கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு

ச்சநீதிமன்றம் தெரிவித்தபடி இன்று கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க இயலாது என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து 13 காங்கிரஸ் உறுப்பினர்களும் மூன்று மஜத உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.  இது குறித்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ஆட்சேபம் தெரிவித்து அந்த ராஜினாமா கடிதங்கள் குறித்து முடிவு எடுக்காமல் இருந்தார்.  இதை ஒட்டி10 அதிருப்தி  உறுப்பினர்கள் உடனடியாக முடிவு எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்..

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இது குறித்து இன்று மாலை ஆறு மணிக்கு கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் உறுப்பினர்களை சந்தித்து பேசி உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு சபாநாயகர் ரமேஷ் குமார் தமக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுவதால் உடனடியாக முடிவு எடுக்க இயலாத நிலையில் உள்ளதாக உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சபாநாயகர் ரமேஷ் குமாரின் அறிக்கை குறித்து நாளை விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.