தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவு: தேர்தல் ஆணையத்தை நாடும் திருமாவளவன்

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், திமுக காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த தொகுதிகள் என்பது குறித்து திமுகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், தேர்தலில் விசிக  தனி சின்னத்தில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதி கள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐகேகே மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

விசிகவுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதிகள் எது என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்தை நாட விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட  மோதிரம் சின்னத்தை மீண்டும் கேட்க முடிவு செய்திருப்பதாகவும், கிடைக்காத பட்சத்தில் வேறு சின்னத்தை வழங்க வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: communist parties, DMK Alliance, MDMK, VCK
-=-