டில்லி,

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்யாவின் உதவியுடன் ஏற்கனவே 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கான  கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

வரும் 2023ம் ஆண்டு இந்த அணு உலைகள் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி,

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகா வாட் மின்சாரத்தை தமிழகத்துக்கே ஒதுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், கூடங்குளத்தின் 3,4 வது அணு உலையின் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.