விரைவில் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் டிகே….!

காஜல் அகர்வால் உள்ளிட்ட 5 நாயகிகள் நடிப்பில் புதிய படமொன்றை இயக்கி முடித்துள்ளார் டிகே.

‘காட்டேரி’ படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்தார் டிகே. இதையும் முழுக்க ஹாரர் காமெடி பின்னணியில் உருவாக்கியிருந்தார்.

இதில் காஜல் அகர்வால், ரெஜினா, ரைசா வில்சன், ஜனனி ஐயர், நொய்ரிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த நொய்ரிகா மும்பையில் மாடலாக இருந்தவர் தற்போது தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

விரைவில் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.