திருப்பாதிரிப்புலியூர்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு புத்த்கம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.  தீபா.   இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தன்னை அவர் வாரிசு எனக் கூறிக் கொண்டு வருகிறார்.   எம் ஜி ஆர் – அம்மா – தீபா பேரவையின் நிறுவனத் தலைவராக உள்ளார்.   இந்தப் பேரவையின் சார்பில் கடலூரி திருப்பாதிரிப்புலியூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் தீபா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.   அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.    அப்போது அவர், “எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத திட்டமிட்டுள்ளேன்.    அவரது மரணம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் முறையாக நடைபெறவில்லை.    அத்துடன் மரணத்தில் சம்மந்தப் பட்ட முக்கியமான நபர்களிடம் விசாரணை நடத்தவில்லை.   இந்த விசாரணை குறித்த விவரங்களை சசிகலாவிடம் வழங்கத் தடை கோரி மனு தாக்கல் செய்துள்ளேன்

சசிகலா குடும்பத்தின் சதியால் என் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது.     சென்னை காவல்துறை ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளேன்.    தமிழக அரசு ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும்  முடக்கி வருகிறது.   இதற்க்குக் காரணம் அது முற்றிலும் மத்திய அரசால் இயக்கப்படுவதே ஆகும்”  என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.