அரசியலில் தீபாவும், விஷாலும் இன்னும் பாலபாடம் கற்கவில்லை: பாஜ எச். ராஜா

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து, நிராகரிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஷாலும், ஜெ.தீபாவும் நேற்று நள்ளிரவு பிரச்சினைகளை ஏற்படுத்தினர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.

அதில்,  விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு. அரசியலில் இன்னும் பாலபாடம் கற்கவில்லை என்று தெரிகிறது என்று கூறி உள்ளார்.

ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனுக்களை தாக்கல் கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்துவிட்டது.

வேட்புமனுக்கள் மீது அதிகாரிகள் நேற்று பரிசீலனை செய்தனர். இதில் படிவம் 26-ஐ நிரப்பாத காரணத்தால் தீபாவின் வேட்புமனுவும், முன்மொழிந்தவர்கள் 2 பேரின் கையெழுத்து தங்களுடையது அல்ல என்று பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டன.

இதுகுறித்து,  பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.