தீபா கணவர் மாதவன் போலீஸில் புகார்!!

சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று காலை தனது கணவர் மாதவனுடன் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு சென்றார்.

அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சகோதரர் தீபக் அழைத்ததால் தான் இங்கு வந்தேன் என்று தீபா பரபரப்பு குற்றம்சாட்டினார். சசிகலாவுடன் சூழ்ச்சி செய்து ஜெயலலிதா கொன்றதில் தீபக்கிற்கு பங்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், அங்கு தீபா சிலர் தாக்கி போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து தீபாவின் கணவர் மாதவன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.